தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மேம்பால இறக்கத்தில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் விபத்து அபாயம்

மேம்பால இறக்கத்தில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் விபத்து அபாயம்

மேம்பால இறக்கத்தில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் விபத்து அபாயம்

1


UPDATED : அக் 28, 2026 05:30 PM

ADDED : அக் 28, 2026 05:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 05:30 PM ADDED : அக் 28, 2026 05:25 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமைந்தகரை: அண்ணா ஆர்ச் மேம்பாலத்தின் இறக்கத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக வரிசைகட்டி நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

அண்ணா நகர், அண்ணா வளைவு பகுதியில், நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் மேம்பாலம் அமைந்துள்ளது. அண்ணா நகரில் இருந்து நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக செல்லவும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து அண்ணா நகர் செல்லவும், இந்த மேம்பாலம் முக்கிய வழித்தடமாக உள்ளது.

குறிப்பாக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து மேம்பாலம் வழியாக வரும் வாகனங்கள், அண்ணா நகர் மற்றும் அண்ணா ஆர்ச் நோக்கி செல்லும் வகையில் சாலைகள் பிரிகின்றன. இதனால், இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், மேம்பாலத்தில் இருந்து அண்ணா ஆர்ச் நோக்கி வளைந்து இறங்கும் பகுதியில், போக்குவரத்து விதிமீறி ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன.

மேம்பாலத்தில் இருந்து இறங்கும் வாகன ஓட்டிகள், வளைவு பகுதியில் திடீரென நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோக்களை கண்டு தடுமாறுகின்றனர். பின்னால் வரும் வாகனங்களும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன. இதனால், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் அபாயம் உள்ளது.

எனவே, அமைந்தகரை போக்குவரத்து போலீசார், விதிமீறி நிறுத்தப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us