UPDATED : நவ 16, 2026 10:36 PM
ADDED : நவ 16, 2026 06:37 PM

அ நிறம் | அளவு
ஆறு குடிசைகள் அகற்றம்
பூந்தமல்லி அருகே, பாரிவாக்கம் ஊராட்சியில், அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான 1.20 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில், நேற்று (நவ.,15) இரவு, அதே பகுதியைச் சேர்ந்த சிலர், ஆறு குடிசைகளை அமைத்து ஆக்கிரமித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பூந்தமல்லி வருவாய் துறையினர் மற்றும் பூந்தமல்லி போலீசார் இன்று (நவ.,16), அங்கு சென்று, 'பொக்லைன்' இயந்திரம் மூலம், ஆறு குடிசைகளையும் அகற்றினர்.
