/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி மாணவர் சிவில் சர்வீசில் தமிழக அளவில் முதலிடம்
/
கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி மாணவர் சிவில் சர்வீசில் தமிழக அளவில் முதலிடம்
கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி மாணவர் சிவில் சர்வீசில் தமிழக அளவில் முதலிடம்
கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி மாணவர் சிவில் சர்வீசில் தமிழக அளவில் முதலிடம்
ADDED : ஏப் 24, 2025 11:50 PM
சென்னை,கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் படித்த சிவச்சந்திரன், சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளதாக, அதன் இயக்குனர் பூமிநாதன் தெரிவித்துள்ளார்.
இகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் படித்த சிவச்சந்திரன், தமிழக அளவில் முதலிடமும், பவித்ரா நான்காம் இடமும் பிடித்துள்ளனர்.
இதுதவிர, இஷானி ஆனந்த், சரண்யா, அப்சரா உள்ளிட்ட, 30 பேர் தேசிய தரவரிசை பட்டியலில், முதன்மையான இடங்களை பிடித்துள்ளனர்.
கடந்த 2017, 2018, 2022 மற்றும் 2023ல் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்த இஷிதா கிஷோர், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா, பிரதாப், சித்ரா ஆகியோரும்; 2018, 2019ல் தமிழக அளவில் முதலிடம் பிடித்த கணேஷ்குமார் பாஸ்கரன், அபர்ணா ரமேஷ் ஆகியோரும் எங்கள் அகாடமியில் படித்தவர்கள்தான்.
பார்வையற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரியான பெனோ ெஸபைன், ஐ.ஆர்எஸ் அதிகாரியான பாலநாகேந்திரன், தமிழிலேயே ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதி வெற்றிபெற்ற மணிகண்டன் ஆகியோரும் எங்கள் அகடமி மாணவர்கள்தான்.
இங்கு, போட்டித் தேர்வுகளை எதிரகொள்ளும் விதம் குறித்த சிறப்பு பயிற்சியோடு, பல்துறை வல்லுனர்களின் சிறப்பு ஆளுமை வகுப்புகளும் நடத்தப்படுவதால், கடந்த 12 ஆண்டுகளாக, சிவில் சர்வீசஸ் தேர்வில், 1,000க்கும் மேற்பட்ட சாதனையாளர்கள் உருவாகி உள்ளனர்.
அகாடமியின் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் கிளைகளில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று, 5,000க்கும் மேற்பட்டோர், கட்டணச்சலுகை மற்றும் உதவித்தொகையை பெற்றுள்ளனர்.
எங்கள் மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2, 2ஏ, உள்ளிட்ட தேர்வுகளிலும் வெற்றிபெற்று உயர் பதவிகளில் உள்ளனர். எங்கள் அகாடமியில் சேர, கட்டணச்சலுகை மற்றும் உதவித்தொகை பெற, 94442 27273 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு பூமிநாதன் தெரிவித்துள்ளார்.
***