/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கெட்டுப்போன உணவால் பாதிப்பு? வயிற்று வலியால் மாணவி மரணம்
/
கெட்டுப்போன உணவால் பாதிப்பு? வயிற்று வலியால் மாணவி மரணம்
கெட்டுப்போன உணவால் பாதிப்பு? வயிற்று வலியால் மாணவி மரணம்
கெட்டுப்போன உணவால் பாதிப்பு? வயிற்று வலியால் மாணவி மரணம்
ADDED : நவ 19, 2024 12:22 AM
பெரவள்ளூர், கோவையை சேர்ந்த ராபின் டென்னிஸ் என்பவரின் மகள் எலினா,15. இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி, மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியரில் கடந்த 8ம் தேதி நடந்தது.
இப்போட்டியில் பங்கேற்ற எலினா, கடந்த 17ம் தேதி காலை கிராண்ட்டிராங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னை சென்டரல் வந்தார். சென்னை வந்ததும், திடீரென வயிற்று வலியால் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனே எலினாவின் உறவினரான, டேவிட் வில்லியம்ஸ் என்பவர்,அண்ணாநகரில் உள்ள சுந்தரம் பவுண்டேஷன் சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்.
பின், எலினாவின் பெரியம்மாவான கலா என்பவரின் பெரவள்ளூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில், எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், போகும் வழியிலேயே எலினா திடீரென இறந்தார்.
இறந்து போன எலினா கடந்த இரண்டு நாட்களாக வயிற்று வலி மற்றும் வாந்தி மயக்கத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். ரயிலில் வரும் போது சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை பிரேத பரிசோதனை முடித்து எலினாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் கோவைக்கு நேற்று எடுத்துச் செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின் அடுத்த கட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.

