/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் பதவி விலக வேண்டும்' அ.தி.மு.க., கவுன்சிலர் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 19, 2025 12:20 AM
திருவொற்றியூர், ''அதிகாரியை மிரட்டிய தி.மு.க., மண்டல குழு தலைவர் பதவி விலக வேண்டும்,'' என, அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக்வலியுறுத்தியுள்ளார்.
திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு, மாநகராட்சி மின் பிரிவு உதவி செயற்பொறியாளர் கண்ணன் என்பவரிடம் பேசுவதாக கூறப்படும், குரல் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து, அ.தி.மு.க., ஏழாவது வார்டு கவுன்சிலர் கார்த்திக், நேற்று கூறியதாவது:
திருவொற்றியூர் மண்டல குழு தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த தனியரசு உள்ளார். இவர், மின் பிரிவு உதவி செயற்பொறியாளர் கண்ணனை மிரட்டி பணம் கேட்கிறார்.
இதன் மூலம், மாநகராட்சிகளில் நடக்கும் பணிகளுக்கு கமிஷன் பெறுவது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. சொல்வதை கேட்காவிட்டால், வேறு இடத்திற்கு மாற்றுவதாக மிரட்டப்படுகிறார். இது கண்டனத்திற்குரியது.
மண்டல குழு தலைவர்உடனடியாக, தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உதவி செயற்பொறியாளர் கண்ணன் சில மாதங்களுக்கு முன், வேறு பணிக்கு இடமாற்றலாகி விட்டார்.
இது குறித்து, மண்டலகுழு தலைவர் தனியரசிடம் கேட்டபோது, 'இதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை' எனக் கூறினார்.