/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'யார் அந்த சார்' பதாகைகள் ஏந்தி மாலில் அ.தி.மு.க., போராட்டம்
/
'யார் அந்த சார்' பதாகைகள் ஏந்தி மாலில் அ.தி.மு.க., போராட்டம்
'யார் அந்த சார்' பதாகைகள் ஏந்தி மாலில் அ.தி.மு.க., போராட்டம்
'யார் அந்த சார்' பதாகைகள் ஏந்தி மாலில் அ.தி.மு.க., போராட்டம்
ADDED : டிச 30, 2024 01:18 AM

சென்னை: அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கு, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர்.
அத்துடன், இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமேஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், அந்த நபர் சம்பவம் நடந்த போது, வேறு ஒருவரிடம் மொபைல் போனில் பேசியதாகவும், கைது செய்யப்பட்ட ஞானசேகரன், அவரை 'சார்' என்று குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவினர், 'அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், 'யார் அந்த சார்' என்ற கேள்வியுடன், 'சேவ் அவர் டாட்டர்ஸ்' என்ற ஹேஷ்டேக் உடன், தமிழகம் முழுதும் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.
மேலும், ராயப்பேட்டையில் உள்ள பிரபல மாலில் அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவினர் 40க்கும் மேற்பட்டோர், 'யார் அந்த சார்' என்ற பதாகையை கைகளில் ஏந்தி, நேற்று மாலை கோஷமிட்டனர்.
இது குறித்து அறிந்து, போலீசார் அங்கு வருவதற்குள், அனைவரும் கிளம்பிவிட்டனர்.
அ.தி.மு.க.,வின் இந்த நுாதன போராட்டத்திற்கு, பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்து உள்ளார்.
போஸ்டர் கிழிப்பு
திருவொற்றியூர் அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு சார்பில், எண்ணுார், திருவொற்றியூர், மணலி சுற்றுவட்டார பகுதிகளில் 'யார் அந்த சார்' போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், எண்ணுார் சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர், உடனுக்குடன் கிழிக்கப்பட்டு, இருந்த தடம் தெரியாமல் செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.