/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஐ.ஆர்., பதிவில் முறைகேடு அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்
/
எஸ்.ஐ.ஆர்., பதிவில் முறைகேடு அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்
எஸ்.ஐ.ஆர்., பதிவில் முறைகேடு அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்
எஸ்.ஐ.ஆர்., பதிவில் முறைகேடு அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 16, 2025 02:50 AM
சென்னை: 'சிறப்பு வாக்காளர் திருத்தத்தில், தி.மு.க.,வினர் முறைகேடு செய்கின்றனர். இதை கண்டி த்து அ.தி.மு.க., சார்பில் நாளை, எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் தயாராகி விட்ட நிலையில், எஸ்.ஐ.ஆர்.,எனும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை, தி.மு.க., ஒருபுறம் மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி, திருத்தப்பணியில் பல்வேறு முறைகேடுகளை செய்து வருகிறது.
சென்னையில், தேர்தல் கமிஷன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள அலுவலர்கள் க ளத்திற்கு வராமல், தி.மு.க., அனுதாபிகள் வருகின்றனர்.
இவர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர்களை சந்தித்து படிவங்களை வழங்காமல், தி.மு.க., நிர்வாகிகள் அலுவலகம் அல்லது வீட்டு வாசலில் அமர்ந்து , அவர்களின் ஆதரவாளர்களை மட்டும் வரவழைத்து, படிவங்களை அளித்து, பூர்த்தி செய்து பெறுகின்றனர்.
முறைகேடு செய்யும் தி.மு.க.,வை கண்டித்து, அ.தி.மு.க., ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்கள் சார்பில், நாளை காலை 10:00 மணியளவில், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

