/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகில இந்திய பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., கல்லுாரி சாம்பியன்
/
அகில இந்திய பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., கல்லுாரி சாம்பியன்
அகில இந்திய பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., கல்லுாரி சாம்பியன்
அகில இந்திய பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., கல்லுாரி சாம்பியன்
ADDED : மார் 19, 2025 12:00 AM

சென்னை,பெங்களூரு வடக்கு பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான பால் பேட்மின்டன் போட்டி, பல்கலை வளாகத்தில், கடந்த 14ல் துவங்கி, நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது.
போட்டியில், நாடு முழுதும் இருந்து, 20க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடந்தன.
'லீக்' சுற்றுகளில், எஸ்.ஆர்.எம்., பல்கலை 5 - 28, 35 - 13 என்ற கணக்கில் ஆந்திரா பல்கலையையும், 35 - 32, 35 - 31 என்ற கணக்கில் தமிழகத்தின் பாரதியார் பல்கலையையும் வீழ்த்தின.
கடைசி லீக் ஆட்டத்தில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் மங்களூரு பல்கலை அணிகள் எதிர்கொண்டன.
விறுவிறுப்பான ஆட்டத்தில், 35 - 28, 35 - 19 என்ற கணக்கில், எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி பெற்றது. அனைத்து சுற்றுகள் முடிவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை ஆறு புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தது.
இந்த வெற்றியால், தொடர்ச்சியாக நான்காவது முறையாக, சாம்பியன் பட்டத்தை எஸ்.ஆர்.எம்., பல்கலை வென்றது.
இரண்டாமிடத்தை, ஆந்திரா பல்கலை, பாதியார் பல்கலை, மங்களூரு பல்கலை அணிகள் முறையே, இரண்டு முதல் நான்காம் இடங்களை கைப்பற்றின.