/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகில இந்திய யு - 17 கிரிக்கெட் சி.எப்., தமிழக அணி 'சாம்பியன்'
/
அகில இந்திய யு - 17 கிரிக்கெட் சி.எப்., தமிழக அணி 'சாம்பியன்'
அகில இந்திய யு - 17 கிரிக்கெட் சி.எப்., தமிழக அணி 'சாம்பியன்'
அகில இந்திய யு - 17 கிரிக்கெட் சி.எப்., தமிழக அணி 'சாம்பியன்'
ADDED : ஆக 20, 2025 12:25 AM

சென்னை, அகில இந்திய, 'யு - 17' கிரிக்கெட் போட்டியில், தமிழக சி.எப்., அணி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
தமிழ்நாடு கிரிக்கெட் பெடரேஷன் சார்பில், அகில இந்திய அளவிலான, 'யு - 17' பிரிவு கிரிக்கெட் போட்டிகள், திருவல்லிக்கேணியில் நடந்தன.
போட்டியில், சி.எப்., எனும் கிரிக்கெட் பெடரேஷனில் பதிவு செய்த, சென்னை, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்றன.
அனைத்து போட்டிகள் முடிவில், சி.எப்.ஐ., சென்னை மற்றும் சி.எப்., தமிழக அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
'டாஸ்' வென்ற சி.எப்.ஐ., சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு, 128 ரன்களை அடித்தது.
அடுத்து களமிறங்கிய, சி.எப்., தமிழக அணி, 15 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 129 ரன்களை அடித்து, ஏழு விக்கெட்டு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.