/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமெரிக்க பெண் மலேஷியா பயணம் ரத்து
/
அமெரிக்க பெண் மலேஷியா பயணம் ரத்து
ADDED : பிப் 20, 2025 12:17 AM
சென்னை, சென்னை விமான நிலையத்தில் இருந்து, மலேஷியா நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும் விமானம், நேற்று மதியம் தயாராகி கொண்டு இருந்தது.
அதில் பயணம் செய்ய வந்தவர்களை, பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிக்கா எமிலியா, பையில் ஜி.பி.எஸ். கருவியுடன் வந்திருந்தார்.
கருவியை விமான நிலையங்களில் எடுத்துவரக் கூடாது என, அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு அவர், எனக்கு தெரியாது மற்ற விமான நிலையங்களில் அனுமதித்தனர்; இதை நான் எடுத்து செல்வேன் என, வாக்குவாதம் செய்துள்ளார். பாதுகாப்பு கருதி அதிகாரிகள் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. அவரது பயணமும் ரத்து செய்யப்பட்டு, விமான நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.