/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'அமெட்' உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு
/
'அமெட்' உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு
ADDED : ஜூலை 12, 2025 12:13 AM

சென்னை, அமெட்' கடல்சார் பல்கலை சார்பில், சென்னையில் நடந்த கடல்சார் உச்சி மாநாட்டில், மும்பை அருகே நடந்த படகு விபத்தில், 57 உயிர்களை காப்பாற்றிய கேப்டன், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
'அமெட்' கடல்சார் பல்கலை சார்பில், உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு மற்றும் பன்னாட்டு விருதுகள் வழங்கும் விழா, சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில் சமீபத்தில் நடந்தது. இதில், 15 நாடுகளைச் சேர்ந்த, 1,200க்கும் மேலான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மும்பை அருகே நடந்த படகு விபத்தில், 57 உயிர்களை காப்பாற்றிய கேப்டன் அன்மோல்குமார் ஸ்ரீவத்சவா, ஐரோப்பா நாடான பல்கேரியாவைச் சேர்ந்த டாக்டர் போயன் மெட்னிகரோவ், சென்னை டிரெக்கோட் நிறுவன இயக்குநர் லட்சுமி பாலாஜி, வெட்பயாடிக்ஸ் நிறுவன இயக்குநர் கார்த்திக் ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மாநாட்டில், அமெட் பல்கலை நிறுவனர் மற்றும் வேந்தர் ராமச்சந்திரன் பேசியதாவது:
கடல்சார் கல்வி மற்றும் தலைமைத்துவத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அமெட் உறுதியாக உள்ளது. கடல்சார் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஏ.ஐ., பசுமை கப்பல் போக்குவரத்து, தானியங்கி தொழில்நுட்பங்கள் மூலமாக பொறுப்பான கண்டுபிடிப்புகளை, கடல்சார் வல்லுனர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமெட் பல்கலை தலைவரும், டாக்டர் ராமச்சந்திரன் கடல்சார் அறக்கட்டளையின் தலைவருமான ராஜேஷ் ராமசந்திரன் பேசுகையில், ''டிஜிட்டல் மாற்றம், திறன் மேம்பாடு மற்றும் உலக தரத்தை நிர்ணயிப்பதில், இந்தியாவின் கடல்துறை பங்குதாரர்களின் முக்கிய பங்கு வகிக்கிறது,'' என்றார்.
அமெட் பல்கலை துணைத் தலைவர் தீபா ராஜேஷ், சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துாதரக துணைத் துாதர் டேவிட் எகிள்ஸ்டன், அமெட் சிட்டி கல்லுாரி முதல்வர் கேப்டன் சந்திரசேகர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.