/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிக்கரணையில் பெட்ரோல் குண்டு வீச்சு ஆணவக்கொலைக்கு பழிவாங்க முயற்சி
/
பள்ளிக்கரணையில் பெட்ரோல் குண்டு வீச்சு ஆணவக்கொலைக்கு பழிவாங்க முயற்சி
பள்ளிக்கரணையில் பெட்ரோல் குண்டு வீச்சு ஆணவக்கொலைக்கு பழிவாங்க முயற்சி
பள்ளிக்கரணையில் பெட்ரோல் குண்டு வீச்சு ஆணவக்கொலைக்கு பழிவாங்க முயற்சி
ADDED : மார் 01, 2024 12:42 AM
பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை, ராஜலட்சுமி நகர், எட்டாவது தெருவில் வசிப்பவர் நித்யானந்தன், 43. தனியார் நிறுவன ஊழியரான இவர், மூன்று ஆண்டுகளாக வாடகை வீட்டில் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 2:00 மணிக்கு, நித்யானந்தன் வீட்டின் முன் பெட்ரோல் குண்டை வீசி, மர்ம நபர்கள் சிலர் தப்பிச்சென்றனர். குண்டு வீச்சில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சேதமடைந்தது.
தவிர, வீட்டு முகப்பில் இருந்த மர அலமாரி உள்ளிட்ட பொருட்கள் எரிய துவங்கின. சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர், தீயை அணைத்தனர்; போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பள்ளிக்கரணையில் வேறு ஜாதி வாலிபரை தங்கை திருமணம் செய்ததால், ஆத்திரத்தில் இருந்த அண்ணன், அவரது நண்பர்கள், தங்கையின் கணவரை வெட்டிக் கொன்றனர்.
பிப்., 24ல் நடந்த இந்த சம்பவத்தில் தங்கையின் அண்ணன் தினேஷ், 23, அவரது நண்பர் ஸ்ரீராம், 24, உட்பட ஐந்து பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்ரீராம் வீட்டின் மீது எறியப்பட்ட பெட்ரோல் குண்டு, தவறுதலாக, பக்கத்தில் வசிக்கும் நித்யானந்தன் வீட்டில் விழுந்துள்ளது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீராம் வீட்டில் குண்டு வீச வந்தவர்கள் யார், முன்விரோதம் காரணமா என்பதை விசாரிக்க, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

