/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறி வெளிநாட்டுக்கு தப்ப முயன்றவர் கைது

ADDED : நவ 20, 2024 12:17 AM
சென்னை,சென்னை விமான நிலையத்தில் இருந்து, மலேஷியாவின் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ பயணியர் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்பட தயாராக இருந்தது. பயணியரின் விபரங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
முன்னுக்குப்பின் முரணாக பேசியவரின் பாஸ்போர்ட்டை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், முஜீப் உசைன், 40, என பெயரில் இருந்தது. ஆனால், அது போலி பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது.
விசாரணையில் முஜீப் உசைன், வங்கதேசத்தில் இருந்து தப்பித்து, இந்தியாவிற்கு சட்டவிரோதமாக வந்து, போலியான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை பெற்றது தெரியவந்துள்ளது.
சென்னையில் உள்ள சில உணவகங்களில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். சென்னையில் உள்ள சிலர், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, குடியுரிமை அதிகாரிகள், முஜிப் உசேனை பிடித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.