/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நண்பர் தாக்கியதில் சுயநினைவின்றி கடலில் விழுந்த ஆந்திர மீனவர் மீட்பு

ADDED : ஆக 05, 2025 12:16 AM
காசிமேடு, மதுபோதையில் நண்பர் தாக்கியதில், சுயநினைவின்றி கடலில் விழுந்த ஆந்திர மீனவர் மீட்கப்பட்டார்.
புது வண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் அலெக்ஸ், 41. இவருக்கு சொந்தமான விசைப்படகில், ஆந்திராவைச் சேர்ந்த அம்பத்தி நீலகண்டன், 38; காரி நரேஷ், 27, ஆகியோர் பணி புரிகின்றனர்.
காசிமேடு பழைய வார்ப்பு நிறுத்தப்பட்டிருந்த விசைப்படைகில், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்துள்ளனர். அப்போது, அம்பத்தி நீலகண்டன் வாங்கிய, 200 ரூபாய் கடன் தொகையை கேட்டு, காரி நரேஷ் சண்டையிட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றி, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த காரி நரேஷ், அம்பத்தி நீலகண்டனை பிடித்து, கீழே தள்ளி விட்டுள்ளார். தலையில் அடிபட்ட நிலையில், அவர் கடலில் விழுந்துள்ளார்.
சுயநினைவின்றி கிடந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காசிமேடு மீன்பிடித் துறைமுகம் போலீசார், காரி நரேஷை கைது செய்தனர்.