/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழை நின்றும் வடியாத கழிவுநீர் பரிதாப நிலையில் அண்ணா நகர்
/
மழை நின்றும் வடியாத கழிவுநீர் பரிதாப நிலையில் அண்ணா நகர்
மழை நின்றும் வடியாத கழிவுநீர் பரிதாப நிலையில் அண்ணா நகர்
மழை நின்றும் வடியாத கழிவுநீர் பரிதாப நிலையில் அண்ணா நகர்
ADDED : டிச 06, 2025 05:21 AM

அண்ணா நகர்: மழை நின்றும், அண்ணா நகரில் சாலையில் கழிவுநீர் தேங்கி யிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'டிட்வா' புயல் காரணமாக, சென்னை நகரில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பெரும்பாலான சாலைகள் மற்றும் உட்புற தெருக்களில் மழைநீர் தேங்கி, மக்கள் பாதிக்கப்பட்டனர்.
படிப்படியாக மழை நின்றதால், தேங்கிய நீர் வடிய துவங்கியது. இருப்பினும், சாலையோரங்களில் மழைநீர் தேங்கியும், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பொங்கி வருவ தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்ணா நகர் மண்டலம் 104வது வார்டு, அண்ணா நகர், 'ஹெச் பிளாக்' 14வது தெருவில், சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்போர் கூறுகையில், 'மழை நின்று, 36 மணி நேரமாகியும், வற்றாத ஊற்றுபோல் கழிவுநீர் தேங்கியுள்ளது. 'மேன்ஹோல்' எனும் இயந்திர குழி பகுதி தாழ்வாக இருப்பதால், வீதி முழுதும் கழிவு நீர் பாய்ந்து செல்கிறது.
'புகார் அளித்தால் கண்துடைப்புக்கே சீரமைப்பு பணி செய்கின்றனர். சாலை மட்டத்திற்கு ஏற்ப இயந்திர குழியின் மூடியை உயர்த்தி அமைக்க வேண்டும்' என்றனர்.

