/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சி
/
லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சி
UPDATED : டிச 06, 2025 05:20 AM
ADDED : டிச 06, 2025 05:18 AM

மயிலாப்பூர்: மயிலாப்பூர், வெங்கடேஷ் அக்ரஹாரம் சாலையில் உள்ள வேதாந்த தேசிகர் அரங்கில், 'ஸ்ரீ வித்ய கோடி குங்குமார்ச்சனை மகா யாகம்' என்ற லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்யும் இரு நாள் நிகழ்ச்சி துவங்கியது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மோகன் ஸ்ரீவஸ்தவா துவக்கி வைத்தார்.
உபி., மாநிலம், வாரணாசி யைச் சேர்ந்த சுவாமிஜி அபிஷேக் பிரம்மச்சாரி தலைமையில், சென்னையில் உள்ள 40 பாராயண மண்டலங்கள் சேர்ந்து, இந்நிகழ்வை நடத்துகின்றன.
மக்கள் மற்றும் நாட்டு நலனுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் 500 பெண்கள் பங்கேற்று, ஒரு கோடி முறை லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்கின்றனர். காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது.

