தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தோழியிடம் அத்துமீறல்: அண்ணா நகர் வாலிபர் கைது

தோழியிடம் அத்துமீறல்: அண்ணா நகர் வாலிபர் கைது

தோழியிடம் அத்துமீறல்: அண்ணா நகர் வாலிபர் கைது


UPDATED : ஆக 09, 2026 08:46 PM

ADDED : ஆக 09, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2026 08:46 PM ADDED : ஆக 09, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நொளம்பூர்: தோழியை வீட்டிற்கு அழைத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 19 வயது இளம்பெண், பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது பள்ளி பருவ நண்பனான விஷால், 19.

விஷாலின் நடவடிக்கை பிடிக்காததால், அவரது மொபைல் எண்ணை, இளம்பெண் 'பிளாக்' செய்துள்ளார்.

இந்நிலையில், வேறு ஒருவரின் எண்ணில் இருந்து இளம்பெண்ணை தொடர்பு கொண்ட விஷால், அவரது தாயை போல் 'மிமிக்ரி' செய்து பேசி, 'வீட்டில் நடக்க உள்ள ஆடி மாத பூஜையில் பங்கேற்க வேண்டும்' எனக்கூறி, வீட்டிற்கு அழைத்துள்ளார்.

இதை நம்பி இளம்பெண் ஆகஸ்ட் 8 அன்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த விஷால், தன் மொபைல்போனில் ஆபாச வீடியோக்களை காட்டியுள்ளார்.

'அதில் வருவதுபோல், உனது புகைப்படத்தையும் சித்தரித்து, இணையத்தில் பதிவேற்றி விடுவேன்' எனக் கூறி, பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின், சிங்கப்பெண் சிறப்பு படைக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்களது அறிவுறுத்தலின்படி, இளம்பெண் திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்படி, மகளிர் போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, விஷாலை கைது செய்து, ஆகஸ்ட் 8 ஆம் தேதி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us