/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2 கோடி மோசடி மேலும் ஒருவர் கைது
/
ரூ.2 கோடி மோசடி மேலும் ஒருவர் கைது
ADDED : அக் 30, 2025 01:09 AM

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் பகவதியப்பன், 54. இவருக்கு, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிஹரகுமார் பழக்கமானார். அப்போது பகவதியப்பனின் மகன் பார்த்திபன் என்பவருக்கு, மத்திய அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, 6 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
பின், போலி பணி நியமன ஆணை கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர்.
இதில், ஹரிஹரகுமார், அவரது நண்பர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இம்மானுவேல் ராஜ்குமார், ஜான் ஆகிய மூவரும், இதேபோன்று பலரிடம், 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது.
ஹரிஹரகுமார், ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான இம்மானுவேல் ராஜ்குமார், 52, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 14.98 லட்சம் ரூபாய், பாஸ்போர்ட், வங்கி பாஸ் புத்தகம் மற்றும் வழக்கிற்கு சம்பந்தமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

