/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போட்டில் புகைக்க வழிகாட்டும் அதிகாரிகள் பெண்கள் தேவைக்கு தீர்வு காணாதது ஏன்?
/
ஏர்போட்டில் புகைக்க வழிகாட்டும் அதிகாரிகள் பெண்கள் தேவைக்கு தீர்வு காணாதது ஏன்?
ஏர்போட்டில் புகைக்க வழிகாட்டும் அதிகாரிகள் பெண்கள் தேவைக்கு தீர்வு காணாதது ஏன்?
ஏர்போட்டில் புகைக்க வழிகாட்டும் அதிகாரிகள் பெண்கள் தேவைக்கு தீர்வு காணாதது ஏன்?
ADDED : அக் 30, 2025 01:07 AM
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இயந்திரங்கள் இருந்தும், 'சானிட்டரி நாப்கின்' கிடைக்காததால், பெண் பயணியர் வெறுப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய முனையங்களின், 'பிக் - அப் பாயின்ட்' பிரச்னை, வாகனங்கள் வந்து செல்வதில் தகராறு என, தினந்தோறும் பிரச்னை ஏற்படுகிறது. பெண்களுக்கு நாப்கின் வழங்க, பிரத்யேகமாக 'வென்டிங்' இயந்திரங்கள் வைக்கப்பட்டும், அவை சரியாக கிடைப்பது இல்லை.
எப்போது இயந்திரத்தை தட்டினாலும், நாப்கின் கிடைக்காததால் பெண் பயணியர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து, பெண் பயணி ஒருவர் கூறியதாவது:
சென்னை விமான நிலையத்தின் முனையங்களில், 'சானிட்டரி நாப்கின்'களுக்கு அடிக்கடி தட்டுப்பாடு ஏற்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன், 'டி1' புறப்படு முனையத்திற்கு சென்றபோது, பாதுகாப்பு சோதனை பகுதி அருகே இருந்த இயந்திரத்தில், நாப்கின் இல்லாமல் இருந்தது.
இதனால், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் போய் பேசி, அனுமதி பெற்று வெளியில் வந்து மருந்தகம் ஒன்றில் வாங்க நேரிட்டது. பாதுகாப்பு சோதனை பகுதியில் சோதனை முடிந்த பின், மீண்டும் வெளியில் செல்ல முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெண்கள் எப்படி சமாளிக்க முடியும்.
'சிகரெட் புகைக்கும் பகுதி' என கொட்டை எழுத்தில், வழிகாட்டி பலகை வைத்துள்ளனர். ஆனால், பெண்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற விமான நிலைய நிர்வாகம் அக்கறை காட்டுவதில்லை.
'ஒவ்வொறு முறையும் எனக்கு மாதவிடாய் உள்ளது; சானிட்டரி நாப்கின்கள் கொடுங்கள்' என, விமான நிலைய அதிகாரிகளிடம் பெண்கள் கேட்க வேண்டுமா.
இது, சரியான நடைமுறையல்ல. விமான நிலைய ஆணையம், இதற்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

