/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவொற்றியூரில் முளைக்கும் குடிநீர் கேன் கடைகளால் அச்சம்?
/
திருவொற்றியூரில் முளைக்கும் குடிநீர் கேன் கடைகளால் அச்சம்?
திருவொற்றியூரில் முளைக்கும் குடிநீர் கேன் கடைகளால் அச்சம்?
திருவொற்றியூரில் முளைக்கும் குடிநீர் கேன் கடைகளால் அச்சம்?
ADDED : ஏப் 13, 2025 09:29 PM
திருவொற்றியூர்:சென்னையில், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதன் காரணமாக, குளிர்பானங்கள், பழவகைகள் சாப்பிடுவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, தினசரி குடிக்கும் குடிநீரின் தேவையும் அதிகரித்தபடியாக உள்ளது. நிலத்தடி நீர், குடிநீர் வாரியத்தால் குழாய் மற்றும் லாரிகளில் வினியோகிக்கப்படும் குடிநீர் தவிர்த்து, கேன்களில் விற்பனையாகும் மினரல் வாட்டர் பயன்பாடு அதிகமாக உள்ளது.
தேவையை காரணம் காட்டி, வடசென்னையில் - திருவொற்றியூர், மணலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் கேன் கடைகள் அதிகளவில் முளைத்து வருகின்றன.
கடைகள் மட்டுமின்றி, கன்டெய்னர் லாரி ஓட்டுனர்களை குறிவைத்து, எண்ணுார் விரைவு சாலை, மாதவரம் விரைவு சாலைகளில், சாலையோரங்களில் சிறிய அளவில் 'டென்ட்' அமைத்து குடிநீர் கேன்கள் விற்பனை செய்யும் கடைகளையும் காண முடிகிறது.
இந்த கேன்களின் வினியோகமாகும் குடிநீர், தரமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, திடீரென முளைத்திருக்கும் குடிநீர் கேன் கடைகளுக்கு உரிமம் உள்ளதா, இங்கு வினியோகமாகும் குடிநீர் தரமுடன் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
இல்லாவிடில், குடிநீரால் நாள்பட்ட நோய்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

