UPDATED : நவ 14, 2026 07:10 PM
ADDED : நவ 14, 2026 07:10 PM

அ நிறம் | அளவு
மீனம்பாக்கம்: உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த ஆயதப்படை போலீஸ்காரர் அஜித்குமார், 32, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த அஜித்குமார், 32. பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை பிரிவு போலீஸ்காரர். திரிசூலம் ரயில் நிலையம் எதிரே உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.
சமீபத்தில் முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித்குமார், தொடர்ந்து வலி மற்றும் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம், குடியிருப்பு அருகே உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீனம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, குடியிருப்பு மக்களிடம் விசாரித்து வருகின்றனர்.
