/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளையாட்டில் விபரீதம் வாலிபரை வெட்டியோர் கைது
/
விளையாட்டில் விபரீதம் வாலிபரை வெட்டியோர் கைது
ADDED : ஜூலை 31, 2025 12:44 AM

பெருங்களத்துார்,
பீர்க்கன்காரணையை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரும், மற்றொரு குழுவினரும் சேர்ந்து, கடந்த 27ம் தேதி, மொபைல் போனில், 'ப்ரீ பயர் கேம்' விளையாடியுள்ளனர். அதில், சிறுவன் அணி வெற்றி பெற்றதாகவும், அதனால், எதிர் அணியினரை சிறுவன் கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த எதிர் தரப்பினர், சிறுவனை தாக்க முயன்றபோது, சிறுவனின் நண்பரான மணி தாமஸ், 27, என்பவர் தடுத்துள்ளார். அப்போது, அவரது கழுத்து, முதுகில் வெட்டிவிட்டு எதிர் தரப்பினர் தப்பினர்.
பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிந்து, மாசாணம், 23, அஜித்குமார், 23, சந்தோஷ், 21, அசோக், 21, ஹரி, 21, ஆகிய ஐந்து பேரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

