/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2 லட்சம் பித்தளை தட்டுகள் கூரையை உடைத்து திருடியோர் கைது
/
ரூ.2 லட்சம் பித்தளை தட்டுகள் கூரையை உடைத்து திருடியோர் கைது
ரூ.2 லட்சம் பித்தளை தட்டுகள் கூரையை உடைத்து திருடியோர் கைது
ரூ.2 லட்சம் பித்தளை தட்டுகள் கூரையை உடைத்து திருடியோர் கைது
ADDED : அக் 20, 2025 04:36 AM
ஏழு கிணறு: பித்தளை பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கூரையை உடைத்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பித்தளை தட்டுகள் திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, வால்டாக்ஸ் சாலை, உட்வார்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 40. இவர், 'பாலாஜி இண்டஸ்ட்ரிஸ்' என்ற பெயரில், பித்தளை பூஜை சாமான்கள் தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த 14ம் தேதியன்று நிறுவனத்தை பூட்டி, ஊருக்கு சென்று உள்ளார்.
இந்த நிலையில், நேற்று நிறுவனத்தின் 'ஆஸ்பெட்டாஸ்' கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பித்தளை தட்டுகளை திருடிச்சென்றது தெரிய வந்தது.
இது குறித்து, ஏழுகிணறு போலீசார் விசாரித்தனர். இதில், சென்னை சென்ட்ரல், வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்த பாலாஜி, 37, சுடலை மணி, 49, கொடுங்கையூரைச் சேர்ந்த பார்த்திபன், 29, ஆகிய மூவர், திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
போலீசார் மூவரையும் கைது செய்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பித்தளை தட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதில் பாலாஜி மீது, ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உட்பட 12 வழக்குகள் உள்ளன.