/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் பெருக்கெடுத்த கழிவு நீர்: மக்கள் மறியல்
/
சாலையில் பெருக்கெடுத்த கழிவு நீர்: மக்கள் மறியல்
ADDED : அக் 20, 2025 04:36 AM

புளியந்தோப்பு: சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீரால் அவதிக்குள்ளான பகுதிமக்கள், மாநகராட்சியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எழும்பூர் தொகுதியில், 77வது வார்டு, அய்யாவு தெரு, கிருஷ்ணப்பா தெரு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக, சாலைகளில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்தோடி தேங்குகிறது.
அப்பகுதியில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யாததால், அப்பகுதி முழுதும் கழிவுநீர் தேங்கி யுள்ளதாக கூறி, பாரத் ஹிந்து முன்னணி மாநில தலைவர் பிரபு தலைமையில், அப்பகுதி வாசிகள் 50க்கும் மேற்பட்டோர், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அரை மணி நேரத்திற்கும் மேல், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை, மின் மோட்டார்களை வைத்து அகற்றுவதாக குடிநீர் வாரிய அதிகாரிகள், உறுதி அளித்ததை அடுத்து, கலைந்து சென்றனர்.