/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமி மீது கார் மோதியதாக ஓட்டுநரை தாக்கிய கும்பல்
/
சிறுமி மீது கார் மோதியதாக ஓட்டுநரை தாக்கிய கும்பல்
சிறுமி மீது கார் மோதியதாக ஓட்டுநரை தாக்கிய கும்பல்
சிறுமி மீது கார் மோதியதாக ஓட்டுநரை தாக்கிய கும்பல்
ADDED : அக் 20, 2025 04:37 AM
அடையாறு: அடையாறில் சிறுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக, கார் ஓட்டுநரை மடக்கி பிடித்து தாக்கியது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.
எண்ணுாரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 29. நேற்று முன்தினம் இரவு, கோவளம் நோக்கி மாருதி காரில் புறப்பட்டார். சாஸ்திரி நகர் அருகில் சென்றபோது, சுதா, 13, என்ற சிறுமி மீது கார் மோதியது.
கார் நிற்காமல் சென்றதால், சிறுமியின் உறவினர்கள் காரை பின்தொடர்ந்து சென்று, திருவான்மியூர் அருகில் மடக்கி பிடித்து, ஓட்டுநர் சதீஷ்குமாரை தாக்கி, அவர் மொபைல் போனை பறித்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்த சிறுமி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரணையில், சிறுமி மீது மோதவில்லை என சதீஷ்குமாரும், இவரை தாக்கவில்லை, மொபைல் போனை பறிக்கவில்லை என, சிறுமியின் உறவினர்களும் கூறினர்.
விபத்து தொடர்பாக, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். ஓட்டுநரை அடித் தது தொடர்பாக, திருவான்மியூர் போலீசார் விசாரிக்கின்றனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த பின், உண்மை நிலவரம் தெரிய வரும் என, போலீசார் கூறினர்.