/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று தீபாவளி கொண்டாட்டத்திற்கு மனது வைப்பாரா வருண பகவான்? குட்டீஸ் வேண்டுதல்
/
இன்று தீபாவளி கொண்டாட்டத்திற்கு மனது வைப்பாரா வருண பகவான்? குட்டீஸ் வேண்டுதல்
இன்று தீபாவளி கொண்டாட்டத்திற்கு மனது வைப்பாரா வருண பகவான்? குட்டீஸ் வேண்டுதல்
இன்று தீபாவளி கொண்டாட்டத்திற்கு மனது வைப்பாரா வருண பகவான்? குட்டீஸ் வேண்டுதல்
ADDED : அக் 20, 2025 04:37 AM
சென்னை: தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தீபாவளியை கொண்டாட இன்று இரவு ஒருநாள், மழை பெய்யாமல் இருக்க வேண்டும் என, குட்டீஸ் வருணபகவானிடம் வேண்டுதல் செய்தனர்.
தீபாவளி என்றாலே, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு, அறுசுவையான உணவு என மக்கள் கொண்டாடுவர். குறிப்பாக பட்டாசு வெடிப்பதில், மக்கள் அதிக ஆர்வம் கொள்வர்.
தற்போது, தர்ப்பூசணி, பீட்சா, கிட்டார் போன்ற பல்வேறு வடிவங்களில் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதால், குழந்தை களுக்கு பெற்றோர் ஆர்வமாக வாங்கி கொடுக்கின்றனர்.
இதனால், பட்டாசு கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஆனால், ஆறு நாட்களுக்கு மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதற்கு ஏற்ப, மிதமான மழை, துாறல் என சென்னை முழுதும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால், பட்டாசு வெடிக்க முடியாமல் குழந்தைகள் திணறுகின்றனர். அதேபோல், புத்தாடை அணிந்து, கோவில், நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்கு செல்ல தடை ஏற்படுமோ என, பொதுமக்கள் கவலை கொண்டனர்.
இது குறித்து, சிறுவர் - சிறுமியர் கூறுகையில், 'தீபாவளி என்று வரும், விதவிதமாக பட்டாசு வெடிக்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்தோம். கடந்தாண்டு தீபாவளிக்கு பின் மழை பெய்தது.
'பட்டாசு வெடிக்க நேரம் கிடைத்தது. இன்று ஒருநாள் இரவில் மழை பெய்யாமல், பட்டாசு வெடிக்க வருணபகவான் மனது வைக்க வேண்டும்' என்றனர்.