/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியிடம் சில்மிஷம் வியாசர்பாடி சிறுவன் கைது
/
சிறுமியிடம் சில்மிஷம் வியாசர்பாடி சிறுவன் கைது
ADDED : அக் 20, 2025 04:39 AM
வியாசர்பாடி: டியூஷன் சென்ற சிறுமியை பின்தொடர்ந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கொடுங்கையூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி. இரண்டு ஆண்டுகளாக கொடுங்கையூரில் உள்ள ஒரு வீட்டில் டியூஷன் சென்று வருகிறார். கடந்த 16ம் தேதி மாலை, டியூஷன் செல்லும்போது மர்ம நபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். சிறுமி பயந்து தப்பியோட, பின் தொடர்ந்த மர்ம நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை, எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் சிறுவனை நேற்று கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.