/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமண மண்டபத்தில் ரூ.2.75 லட்சம் திருடியவர் கைது
/
திருமண மண்டபத்தில் ரூ.2.75 லட்சம் திருடியவர் கைது
ADDED : பிப் 10, 2025 03:22 AM

சென்னை:திருமண மண்டபத்தில், 2.57 லட்சம் ரூபாய் மொய் பணம் மற்றும் நகைகளை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, வேதகிரி தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரி,60.  இவரின் மூத்த மகனுக்கு, ஜன.,26ல், மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியில் உள்ள, வன்னியர் தருமபரிபாலன சங்க மண்டபத்தில் திருமணம் நடந்தது.
அப்போது, மொய்யாக கிடைத்த, 2.57 லட்சம் ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை, மண்டபத்தின் ஓரமாக வைத்துவிட்டு, மணமக்கள் அவர்களின் குடும்பத்தாருடன் குழு புகைப்படம் எடுத்தனர். அந்த சமயம் பார்த்து, மொய் பணம் மற்றும் நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார்.
மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிந்து, திருமண மண்படம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த புரு ேஷாத்தம்மன், 53 என்பவர், மொய் பணம் மற்றும் நகைகளை திருடியது தெரியவந்தது.
அவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், புருேஷாத்தம்மன், பிப்.,3ல், சைதாப்பேட்டையில் உள்ள திருமண மண்படம் ஒன்றில் மொய் பணம் திருடியதும், இவர் மீது, ஏற்கனவே திருட்டு, வழிப்பறி என, ஐந்து வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
புரு ேஷாத்தம்மனிடம் இருந்து, 2.57 லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

