தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/‘ஆர்த்தி ஸ்கேன்ஸ்’ ஆய்வகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி

‘ஆர்த்தி ஸ்கேன்ஸ்’ ஆய்வகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி

‘ஆர்த்தி ஸ்கேன்ஸ்’ ஆய்வகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி


UPDATED : அக் 16, 2026 12:00 AM

ADDED : அக் 15, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 12:00 AM ADDED : அக் 15, 2026 11:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘ஆர்த்தி ஸ்கேன்ஸ்’ ஆய்வகம், அசோகா பல்கலையின் கொய்தா டிஜிட்டல் சுகாதார மையத்துடன் இணைந்து, ‘மருத்துவ இமேஜிங் துறையில் செயற்கை நுண்ணறிவு’ குறித்த ஆராய்ச்சி செய்யும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து, ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிர்வாக இயக்குநர் அருண்குமார் கோவிந்தராஜன் கூறியதாவது:

கதிரியக்கவியல் துறையில் பயன்பாட்டில் உள்ள, பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவிகள், மேற்கத்திய நாடுகளின் மக்கள் தொகை தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.

இந்திய மருத்துவ சூழல், சிகிச்சை தொடர்பாக உள்நாட்டு தரவுகளை கொண்டு, செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கி பரிசோதிக்க வேண்டும்.

அதன்படி, இந்திய தரவு பாதுகாப்பு விதிகள் மற்றும் உரிய நெறிமுறை குழுவின் ஒப்புதலுடன், பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில், மருத்துவ இமேஜிங் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்திய நோயாளிகளின் பன்முகத்தன்மை மற்றும் உபகரணங்களின் தன்மைக்கு ஏற்ப, ரேடியாலஜி செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் துல்லியம், நியாயத்தன்மையை பரிசோதிக்க தரவுகள் பயன்படுத்தப்படும்.

முதற்கட்டமாக, மார்பக எக்ஸ்–ரே ஏ.ஐ., மாதிரி உருவாக்கப்பட்டு, நாட்டில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இலவசமாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us