தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்


UPDATED : அக் 16, 2026 12:00 AM

ADDED : அக் 15, 2026 11:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 12:00 AM ADDED : அக் 15, 2026 11:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநின்றவூர்: மின்சார ரயில்களை தாமதமாக இயக்குவதை கண்டித்து, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக மின்சார ரயில்கள், திருநின்றவூர் ரயில் நிலையத்தில் தாமதாக வருவதாக கூறப்படுகிறது.

இதனால் குறித்த நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல், தனியார் நிறுவன ஊழியர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், 40 வயது மதிக்கத்தக்க நபர், நேற்று காலை திடீரென அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் தடத்தில், தண்டவாளம் நடுவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீசார் சமாதானம் செய்தும் நகரவில்லை. சிறிது நேரத்தில், சென்னை செல்லும் மின்சார ரயில் வந்ததை அடுத்து எழுந்து சென்றார்.

இதனால், 10 நிமிடங்களுக்கு மேல் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் ரயில்வே போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us