ADDED : டிச 21, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுவண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டையில் மீனவரை தாக்கி வழிபறியில் ஈடுபட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டை, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 33; மீனவர்.
இவர், நேற்று புதுவண்ணாரப்பேட்டை, கிராஸ் ரோடு 'டாஸ்மாக்' கடை அருகே நடந்து வந்த போது, மர்ம நபர்கள் மூவர், கழுத்தில் கிடந்த வெள்ளி செயினை பறிக்க முயன்றனர்.
ஸ்ரீதர் கையில் செயினை பிடித்து கொள்ள, மூவர் கும்பல் அவரை முகத்தில் தாக்கி செயினையும், மொபைல் போனையும் பறித்து தப்பினர்.
இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.