/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏ.டி.எம்., மையத்தில் பேட்டரி திருட முயற்சி
/
ஏ.டி.எம்., மையத்தில் பேட்டரி திருட முயற்சி
ADDED : நவ 23, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள, தனியார் வங்கி ஏ.டி.எம்., மையத்திற்கு நேற்று மாலை, இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அந்த மையத்தில் புகுந்து, இரும்பு கம்பியால் உடைத்து, பேட்டரி திருட முயன்றுள்ளனர். அருகே இருந்தவர்கள் மந்தைவெளியை சேர்ந்த கார்த்திக்கை, 36 பிடித்து, தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்; மற்றொருவர் தப்பிவிட்டார்.
காார்த்திக்கை கைது செய்து போலீசார், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணம் கொள்ளையடிக்க முயற்சி நடந்ததா என விசாரித்து வருகின்றனர். தப்பிய, கண்ணகி நகரைச் சேர்ந்த சீனா,45 என்பவரை தேடி வருகின்றனர்.