/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தற்கொலை நாடகமாடியதாக ஆட்டோ டிரைவர் கைது
/
தற்கொலை நாடகமாடியதாக ஆட்டோ டிரைவர் கைது
ADDED : ஏப் 16, 2025 12:16 AM
எம்.கே.பி.நகர், சென்னை, வியாசர்பாடி, ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ரகு, 35; ஆட்டோ டிரைவர்.
இவருக்கு திருமணமாகி சோனியா என்ற மனைவியும், 13 - 8 வயது குழந்தைகளும் உள்ளனர். திருமணத்தின் போது சோனியா அணிந்து வந்த 10 சவரன் தங்க நகையை, மாமியார் மரகதத்திடம் கொடுத்துள்ளார். சமீபத்தில் சோனியா தன் நகையை திருப்பி கேட்ட போது, தன்னிடம் நகை ஏதும் கொடுக்கவில்லை என கூறி, மாமியார் மறுத்துள்ளார். இதனால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து கடந்த 10ம் தேதி, எம்.கே.பி.நகர் நகர் போலீசில் சோனியா கொடுத்த புகாரின்படி, காவல் நிலையத்தில் மரகத்திடம் போலீசார் விசாரணை செய்த போது, நான் 10 சவரன் நகை வாங்கவில்லை எனக்கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் ரகு, ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் பாட்டிலை எடுத்து வந்து, அவர் மீதும், மனைவி மற்றும் இரு குழந்தைகள் மீதும் ஊற்றினார். இதனால் பதறி போன காவலர்கள், அவர்களை தடுத்து தண்ணீரை ஊற்றினர். பின் குழந்தைகளை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்றது போல் நாடகமாடியதாக, ரகுவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

