/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒடிஷா பெண்ணிடம் சில்மிஷம் ஆட்டோ ஓட்டுநருக்கு 'காப்பு'
/
ஒடிஷா பெண்ணிடம் சில்மிஷம் ஆட்டோ ஓட்டுநருக்கு 'காப்பு'
ஒடிஷா பெண்ணிடம் சில்மிஷம் ஆட்டோ ஓட்டுநருக்கு 'காப்பு'
ஒடிஷா பெண்ணிடம் சில்மிஷம் ஆட்டோ ஓட்டுநருக்கு 'காப்பு'
ADDED : நவ 13, 2025 12:50 AM

மாதவரம்: ஆட்டோவில் சவாரி வந்த ஒடிஷாவைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
ஒடிஷாவைச் சேர்ந்தவர் அசித் நாயக், 33. இவர், வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருடன் பணிபுரியும் 22 வயது ஒடிஷாவைச் சேர்ந்த இளம்பெண்ணும், நேற்று முன்தினம் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து வடபெரும்பாக்கம் செல்ல ஆட்டோவில் ஒன்றாக ஏறினர்.
மாதவரம், சின்ன ரவுண்டானா வி.எஸ்.மணி நகர் அருகே ஆட்டோ சென்றபோது, ஆட்டோவை ஒதுக்குப்புறமான இடத்திற்கு ஓட்டிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர், கத்தியை காட்டி மிரட்டி, வடமாநில பெண்ணிடம் அத்துமீறியுள்ளார்.
பயந்து போன இருவரும் அபயக்குரல் எழுப்பினர். இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், அசித் நாயக்கை மிரட்டி அவர் கழுத்தில் இருந்த 6 கிராம் தங்க நகையை பறித்து, அங்கிருந்து மாயமானார்.
இது குறித்து விசாரித்த மாதவரம் போலீசார், ஆட்டோ ஓட்டுநரை ரெட்டேரி அருகே மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், மாதவரம் சுந்தர விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த 'பல்லு' பிரசாந்த், 24, என்பதும், இவர் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

