ADDED : நவ 13, 2025 12:50 AM
ஆவடி: யானைகவுனி, ஆதியப்பா நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன், 55. இவரது தந்தை பாலசுப்ரமணியனுக்கு திருவள்ளூர் மாவட்டம், வீச்சூர் கிராமம் லட்சுமி நகரில், 2,400 சதுரடி இடம் உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு உடல்நல குறைவால் பாலசுப்ரமணியன் இறந்துவிட, சங்கரன் அந்த இடத்தை விற்பனை செய்ய முடிவெடுத்து, வில்லங்க சான்று போட்டு பார்த்துள்ளார்.
அப்போது, இறந்த பாலசுப்ரமணியனின் பெயரில் போலி பத்திரம் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து, சுடர்விழி, 41, என்பவர் அந்த இடத்தை அபகரித்தது தெரிந்தது. இதையடுத்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவில், சங்கரன் புகார் அளித்தார்.
அதன்படி, நிலப் பிரச்னை பிரிவு போலீசார், வழக்கு பதிந்து, போலி பத்திரங்களை தயார் செய்து, மோசடியில் ஈடுபட்ட, புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுடர்விழி, 41 மற்றும் விஜயலட்சுமி, 48 ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

