ADDED : நவ 18, 2026 08:57 PM
அ நிறம் | அளவு
கொளத்துார்: கொளத்துாரைச் சேர்ந்த 9 வயது சிறுமி, நுங்கம்பாக்கத்தில் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.
சிறுமியை தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்த அயனாவரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜபிரகாஷ், 50, என்பவர், நேற்று (நவ.,17) மாலை சிறுமியை ஆட்டோவில் அழைத்து வந்தபோது, வழியில் நிறுத்தி ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து கொளத்துார் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணைக்கு பின், ராஜபிரகாஷை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்து இன்று (நவ.,18) சிறையில் அடைத்தனர்.
