ADDED : நவ 18, 2026 08:57 PM
அ நிறம் | அளவு
கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜா, 60, என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், 31, என்பவர், நேற்று (நவ.,17) காலை வழிமறித்து, தன் மாமாவின் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டதாகக் கூறி தகராறு செய்துள்ளார்.
தொடர்ந்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துத் தப்பினார். காயமடைந்த ராஜா அளித்த புகாரின்படி, கோடம்பாக்கம் போலீசார், பார்த்திபனை நேற்று கைது செய்து, கத்தியைப் பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கெனவே வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட ஆறு வழக்குகள் உள்ளன.
