/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நள்ளிரவில் ஆட்டோ சூறை நந்தனம் வாலிபர்கள் கைது
/
நள்ளிரவில் ஆட்டோ சூறை நந்தனம் வாலிபர்கள் கைது
ADDED : பிப் 15, 2025 09:03 PM
மாம்பலம்:தி.நகர், காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன், 24; ஆட்டோ ஓட்டுநர். கடந்த 12ம் தேதி நள்ளிரவு, சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, இரண்டு போதை வாலிபர்கள், தன் ஆட்டோ கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. இது குறித்து குணசேகரன் தட்டிக்கேட்டார். ஆத்திரத்தில் அந்த வாலிபர்கள், குணசேகரனை ஆபாசமாக பேசியதோடு, அங்கிருந்த இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி சென்றனர். இது குறித்து மாம்பலம் போலீசார் விசாரித்தனர்.
இதில், நந்தனம் சி.ஐ.டி., நகரைச் சேர்ந்த நந்தகுமார், 24, தமிழரசன், 21, என்பதும் தெரிய வந்தது. இவர்களது நண்பர் கணேசன், 26, சில நாட்களுக்கு முன் சி.ஐ.டி., நகரில் உள்ள மதுக்கூடத்தில் மது அருந்தும்போது, தி.நகர் காமராஜர் காலனியைச் சேர்ந்த ராஜேஷ், 24, என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நண்பர்கள் கணேசன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மது போதையில் ராஜேஷ் வீட்டை தேடி வந்த நந்தகுமர் மற்றும் தமிழரசன், வீடு தெரியாத ஆத்திரத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து, ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

