/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிக்கும் டூ - வீலர்கள் ஆவடி சந்தையில் அவதி
/
ஆக்கிரமிக்கும் டூ - வீலர்கள் ஆவடி சந்தையில் அவதி
ADDED : ஜன 03, 2025 12:18 AM

ஆவடி, ஆவடி புதிய ராணுவ சாலையில், ஆவடி மாநகராட்சி, ஆவடி காய்கறி மார்க்கெட், பேருந்து நிறுத்தம், ஆவடி ரயில் நிலையம் செல்லும் சாலை, துணை கமிஷனர் அலுவலகம், மசூதி, கோவில்கள் மற்றும் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன.
இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
குறிப்பாக, ஆவடி காய்கறி சந்தை பகுதியில் 100 மீட்டர் துாரத்திற்கு, சாலையில் அணிவகுத்து நிற்கும் இருசக்கர வாகனங்களால், தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நம் நாளிதழ் தொடர் செய்தி எதிரொலியால், ஆவடி போக்குவரத்து போலீசார், அங்கு 'நோ பார்க்கிங்' பதாகைகள் வைத்து நெரிசலை கட்டுப்படுத்தினர். மேலும், மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதியில், 'பார்க்கிங்' செய்ய இடம் ஒதுக்கப்பட்டது.
இந்த, 'பார்க்கிங்' பகுதி, சாலையோர வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, போலீசார் வைத்த அறிவிப்பு பதாகையை பொருட்படுத்தாமல், பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால், இடநெருக்கடியால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.