/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அய்யா வைகுண்ட தர்மபதி அவதார திருநாள் ஊர்வலம்
/
அய்யா வைகுண்ட தர்மபதி அவதார திருநாள் ஊர்வலம்
ADDED : மார் 04, 2024 01:53 AM

மணலிபுதுநகர்:பிரசித்தி பெற்ற மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில், அய்யா அவதார திருநாள் ஊர்வலம், மார்ச் 3ம் தேதி, வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, 192வது அவதார திருநாளையொட்டி, நேற்று காலை வண்ணாரப்பேட்டை, நாராயணப்ப நாயக்கன் தெருவில் இருந்து, ஆஞ்சநேயர் வாகனத்தில், அய்யா வைகுண்ட தர்மபதி மற்றும் அவர் அருளிச் செய்த அகில திரட்டு ஆகமத்தை வைத்து ஊர்வலம் துவங்கியது.
ஊர்வலத்தை தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், லதா நாராயணன் ஆகியோர், திருநாமக் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
ஊர்வலம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை வழியாக, மணலிபுதுநகர் பதியை சென்றடைந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
மாலையில் ஊஞ்சல் சேவை, தாலாட்டு, சரவிளக்கு பணிவிடை மற்றும் அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. பின், வைகுண்ட ஜோதி ஏற்றுதல், இனிமம் வழங்குதல் நிகழ்வுடன், அய்யாவை குண்டர் அவதார திருநாள் நிறைவடைகிறது.
விழாவில், தர்மபதி நிர்வாகிகள் துரைப்பழம், வைகுண்டராஜ், ஜெயக்கொடி, ஐவென்ஸ், சிவராஜன், மனுவேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

