/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பம்மல் சார் - பதிவாளர் ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
/
பம்மல் சார் - பதிவாளர் ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
பம்மல் சார் - பதிவாளர் ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
பம்மல் சார் - பதிவாளர் ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
ADDED : ஜூலை 18, 2025 12:29 AM
பம்மல், பம்மல் சார் - பதிவாளர் அலுவலகத்தில், நிலங்கள் சம்பந்தமாக பத்திரப்பதிவு செய்வதற்கு, அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக, தொடர்ந்து புகார் வந்தது.
இதையடுத்து, செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பம்மல் சார் - பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்ததும், பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து, பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள், பத்திரப்பதிவு அலுவலர் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் என, அனைவரிடமும் தீவிர சோதனை நடத்தினர்.
மாலையில் துவங்கிய சோதனை, நள்ளிரவு வரை நீடித்தது. இதில், கணக்கில் வராத, 38,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அது குறித்து, பொறுப்பு சார் - பதிவாளர், பால்ராஜ் என்பவரிடம் விளக்கம் கேட்டபோது, அவர் உரிய பதிலளிக்காததால், பணத்தை கைப்பற்றி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.