/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜி.பி.எஸ்., கருவியுடன் வந்த விமான பயணிக்கு தடை
/
ஜி.பி.எஸ்., கருவியுடன் வந்த விமான பயணிக்கு தடை
ADDED : நவ 21, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும், 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்பட தயாராக இருந்தது.
சென்னையைச் சேர்ந்த சீனிவாசன், 25, என்ற பயணியின் பெட்டியில், செயற்கைகோள் உதவியுடன் செல்லும் இடங்களை துல்லியமாக காட்டும் ஜி.பி.எஸ்., கருவி இருப்பது தெரியவந்தது.
இந்த கருவியை எடுத்துச் செல்லக் கூடாது என்பதால், அதை பறிமுதல் செய்து, சீனிவாசனின் பயணத்தை, அதிகாரிகள் ரத்து செய்தனர். பின், அந்த கருவியை உறவினர்களிடம் கொடுத்து விட்டு, மற்றொரு விமானத்தில் துபாய் செல்ல, அவரை போலீசார் அனுமதித்தனர்.

