/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெளி ஆட்கள் வருவதை தடுக்க ஏர்போர்ட்டில் தடுப்பு அமைப்பு
/
வெளி ஆட்கள் வருவதை தடுக்க ஏர்போர்ட்டில் தடுப்பு அமைப்பு
வெளி ஆட்கள் வருவதை தடுக்க ஏர்போர்ட்டில் தடுப்பு அமைப்பு
வெளி ஆட்கள் வருவதை தடுக்க ஏர்போர்ட்டில் தடுப்பு அமைப்பு
ADDED : டிச 17, 2025 05:49 AM

சென்னை: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையம் அருகே, வெளியாட்கள் நுழைவதை தடுக்க, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய 'டி2' சர்வதேச வருகை முனையத்தின் அருகே, விமான நிலைய மெட்ரோவுக்கு செல்லும் வழியில், ஏ.ஏ.ஐ., ஊழியர் நல உணவகம் இயங்கி வந்தது.
இதன் ஒப்பந்தம் முடிவடைந்ததால், நான்கு மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. அந்த இடத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இதனால், அந்த உணவகம் இருந்த இடத்தில் மர்ம நபர்கள் சிறுநீர் கழிப்பது, இரவு நேரத்தில் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். பயணியரை மிரட்டும் சம்பவமும் நடப்பதாக, நம் நாளிதழில், கடந்த 15ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, சென்னை விமான நிலைய போலீசார், அந்த பகுதியில் வெளியாட்கள் யாரும் நுழையாமல் இருக்க, தடுப்பு அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பயணியருக்கு தொந்தரவு தரும்படி அங்கு யார் நின்றாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

