/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'தினமும் 10 சதவீதம் சிக்கனம் செய்தால் மின் தேவை 2,000 மெகா வாட் குறையும்'
/
'தினமும் 10 சதவீதம் சிக்கனம் செய்தால் மின் தேவை 2,000 மெகா வாட் குறையும்'
'தினமும் 10 சதவீதம் சிக்கனம் செய்தால் மின் தேவை 2,000 மெகா வாட் குறையும்'
'தினமும் 10 சதவீதம் சிக்கனம் செய்தால் மின் தேவை 2,000 மெகா வாட் குறையும்'
ADDED : டிச 17, 2025 05:45 AM

சென்னை: ''அனைத்து பிரிவு மின் நுகர்வோரும், 10 சதவீதம் வரை சிக்கனமாக பயன்படுத்தினால் தினமும், 1,500 முதல் 2,000 மெகா வாட் வரை மின் தேவையை குறைக்கலாம்,'' என, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழக மின் வாரியம் சார்பில் ஆண்டுதோறும் டிச., 14 முதல், 20ம் தேதி வரை மின் சிக்கன வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா சாலை மின் வாரிய தலைமை அலுவலகம் அருகில், மின் வாரிய பணியாளர்கள் பங்கேற்ற மின் சிக்கன விழிப்புணர்வு மனித சங்கிலி நேற்று நடந்தது.
இதில், மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
மின் சிக்கனம் என்பது தனிநபர் பொறுப்பு மட்டுமல்ல; நாட்டின் வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் அவசியமான ஒன்று. தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. இதற்கு மின்சாரம் முக்கியம்.
தமிழகத்தின் தினசரி உச்சபட்ச மின் தேவை, 20,000 மெகா வாட்டிற்கு மேல் உள்ளது.
அனைத்து பிரிவு மின் நுகர்வோரும், 10 சதவீதம் வரை சிக்கனமாக பயன்படுத்தினால் தினமும், 1,500 மெகா வாட் முதல் 2,000 மெகா வாட் வரை மின் தேவையை குறைக்கலாம். இதன் வாயிலாக, மின் வாரியத்தின் செலவு பெருமளவு மிச்சமாகும்.
மின் சாதனங்களில் ஏற்படும் பழுதை மக்கள் தாங்களே சுயமாக சரிசெய்யாமல், உரிய தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

