/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் மீது பைக் மோதி விபத்து; சிறுவன் பலி; ஒருவர் காயம்
/
கார் மீது பைக் மோதி விபத்து; சிறுவன் பலி; ஒருவர் காயம்
கார் மீது பைக் மோதி விபத்து; சிறுவன் பலி; ஒருவர் காயம்
கார் மீது பைக் மோதி விபத்து; சிறுவன் பலி; ஒருவர் காயம்
ADDED : அக் 10, 2025 07:52 AM
சென்னை; முன்னால் சென்ற கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில், 17 வயது சிறுவன் பலியானார். மற்றொருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை, மீனம்பாக்கம், பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் சபீர் உசேன், 22. நெசப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹிம் பாட்ஷா, 17.
இருவரும், 'யமஹா' இருசக்கர வாகனத்தில், ஜி.எஸ்.டி., சாலை வழியாக விருதாச்சலம் நோக்கி, நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை, சபீர் உசேன் ஓட்டினார்.
பல்லாவரம், மெட்ரோ ரயில் பார்க்கிங் அருகே சென்றபோது, முன்னால் சென்ற அடையாளம் தெரியாத கார் மீது பைக் மோதியது. இதில், இருவரும் நிலைதடுமாறி விழுந்தனர்.
பின்னால் அமர்ந்திருந்த இப்ராஹிம் பாட்ஷாவுக்கு, பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
காலில் காயமடைந்த சபீர் உசேன், தாம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார்.
இந்த விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.