/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் திருடன் கைது 3 பைக் பறிமுதல்
/
பைக் திருடன் கைது 3 பைக் பறிமுதல்
ADDED : மார் 20, 2025 12:20 AM

மதுரவாயல், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அலிப் யுதின், 28. இவர் சென்னை அடுத்த வானகரம் கந்தமாபுரம், சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் வசித்து வருகிறார். வானகரத்தில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த பிப்., 25ம் தேதி தன் பைக்கை வீட்டிற்கு முன் நிறுத்தினார்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, பைக் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து புகாரில் மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், பைக்கை திருடியது வில்லிவாக்கம் ராஜமங்கலம், 2வது தெருவை சேர்ந்த சோனு, 19 என, தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். சோனு கடந்த இரு மாதங்களுக்கு முன் மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 2 பைக்குகள் திருடியதும் தெரியவந்தது. அவர் மீது, மாதவரம், ராஜமங்கலம், திருமுல்லைவாயல், அம்பத்துார் எஸ்டேட் மற்றும் கொளத்துார் ஆகிய காவல் நிலையங்களில் 11 திருட்டு வழக்குகள் உள்ளன. அவரிடம் மூன்று பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
***********************