ADDED : நவ 10, 2026 05:38 PM
எண்ணுார்: கடலில் குளிக்கும்போது மாயமான கல்லுாரி மாணவர் முகமது பைசல், 18, என்பவரின் உடல், எண்ணுார் பகுதியில் இன்று (நவ.,10) கரை ஒதுங்கியது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பர்மா நகரைச் சேர்ந்தவர் முகமது பைசல், 18; தனியார் கல்லுாரி மாணவர்.
இவர், நேற்று (நவ.,9) உறவினர்கள் சமீர், 19, ஷாரூக், 24, முகமது கைப், 18, யுவராஜ், 18, ஆகியோருடன் தாழங்குப்பம் கடற்கரைக்கு வந்து, கடலில் இறங்கி குளித்துள்ளனர்.
அப்போது, அலையில் சிக்கி முகமது பைசல் மாயமானார். எண்ணுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தேடி வந்தனர்.
இந்நிலையில், எண்ணுார் அடுத்த பெரியகுப்பம் பகுதியில் நேற்று, முகமது பைசலின் உடல் கரை ஒதுங்கியது. போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
