/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெடிகுண்டு மிரட்டல் ஐகோர்ட்டில் சோதனை
/
வெடிகுண்டு மிரட்டல் ஐகோர்ட்டில் சோதனை
ADDED : செப் 05, 2025 02:21 AM
சென்னை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரிந்தது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக, மின்னஞ்சல் மூலம் நீதிமன்றத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.
இதையடுத்து, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்ற வளாகம், விசாரணை அறைகள் என, உயர் நீதிமன்ற வளாகம் முழுதும், மோப்ப நாய் உதவியுடன், 20க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள், போலீசாருடன் இணைந்து தீவிர சோதனை நடத்தினர்.
காலை முதல் மாலை வரை சோதனை நடத்தப்பட்டது. நீதிமன்றத்தில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால், சோதனையில் எந்த வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை. அது வெறும் புரளி என போலீசார் தெரிவித்தனர்.
நீதிமன்ற பணி நேரத்தில் நடந்த வெடிகுண்டு சோதனையால், வழக்காடிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுவரை உயர் நீதிமன்றம், அதே வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் என, தொடர்ந்து மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.