/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 02, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, இ-மெயில் வாயிலாக அண்ணா பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அண்ணா பல்கலை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை, இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அண்ணா பல்கலை பாதுகாப்பு அதிகாரி தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பல்கலை முழுதும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிப்பொருட்கள் ஏதும் கிடைக்காததால் மிரட்டல், வெறும் புரளி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து மிரட்டல் வந்த இ-மெயில் ஐ.டி.,யை வைத்து மர்மநபரை கோட்டூர்புரம் போலீசார் தேடி வருகின்றனர்.