/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது தி.நகர் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
பொது தி.நகர் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஏப் 19, 2025 11:52 PM
பாண்டிபஜார், தி.நகர், தியாகராயர் சாலையில் உள்ள 'ரெசிடென்சி' நட்சத்திர ஹோட்டலுக்கு, கடந்த வெள்ளிக்கிழமை இரவு மற்றும் நேற்று காலை மின்னஞ்சல் வந்துள்ளது.
அதில், ஹோட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து, ஹோட்டல் நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தது. விரைந்து வந்து, பாண்டிபஜார் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என, தெரியவந்தது. இது குறித்து பாண்டிபஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

